mercredi, avril 15, 2009

மாதாந்திர பயான் - ஏப்ரல் (Avril, 2009)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் !!!!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
பேரன்புடையீர்,

இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் 26.04.2009 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பிற்பகல் சரியாக 16:00 மணி முதல் 18.00 மணி வரை நமது சங்க வளாகத்தில் பயானுன் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். தாங்கள், தாங்களின் குடும்பத்துடன் கலந்துக்கொண்டு « பயனடையுமாறு » அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


ASSALAMOU ALAIKOUM !!!

Chers frères, Chères Sœurs,

Votre Association AMTC, vous convie à une conférence Thématique qui aura lieu le Dimanche 26 Avril 2009, de 16H00 à 18H00 dans le LCR de la Chanterelle. Nous vous attendons nombreux


இப்படிக்கு,
நிர்வாகம்.

vendredi, février 13, 2009

மாதாந்திர பயான் - பிப்ரவரி (Février, 2009)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் !!!!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)......
பேரன்புடையீர்,
இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் 15.02.2009 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பிற்பகல் சரியாக 16:00 மணி முதல் 18.00 மணி வரை நமது சங்க வளாகத்தில் பயானுன் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். தாங்கள், தாங்களின் குடும்பத்துடன் கலந்துக்கொண்டு « பயனடையுமாறு » அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

ASSALAMOU ALAIKOUM !!!
Chers frères, Chères Sœurs, Votre Association AMTC, vous convie à une conférence Thématique qui aura lieu le Dimanche 15 Février 2009, de 16H00 à 18H00 dans le LCR de la Chanterelle. Nous vous attendons nombreux
இப்படிக்கு,
நிர்வாகம்.

samedi, janvier 10, 2009

மாதாந்திர பயான் - ஜனவரி (Janvier, 2009)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் !!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)......

பேரன்புடையீர்,

இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் 18.01.2009 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பிற்பகல் சரியாக 15.30 மணி முதல் 17.00 மணி வரை நமது சங்க வளாகத்தில் பயானுன் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தாங்கள், தாங்களின் குடும்பத்துடன் கலந்துக்கொண்டு « பயனடையுமாறு » அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

ASSALAMOU ALAIKOUM !!!
Chers frères, Chères Sœurs, Votre Association AMTC, vous convie à une conférence Thématique qui aura lieu le Dimanche 18 Janvier 2009, de 15H 30 à 17 H 00 dans le LCR de la Chanterelle. Nous vous attendons nombreux


இப்படிக்கு,
நிர்வாகம்.

samedi, décembre 06, 2008

ஹஃஜ் பெருநாள் தொழுகை மற்றும் நல்வாழ்த்துக்கள் !!!!

இன்ஷாஅல்லாஹ் திங்கள்கிழமை (08.12.2008) காலை 9.00 மணிக்கு ஹஃஜ் பெருநாள் தொழுகை MAISON DE QUARTIER-ல் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம் !!!!!

ஹஃஜ் பெருநாள் கொண்டாடும் அனைத்துலக முஸ்லீம் சகோதர, சகோதரிகளுக்கு நமது செர்ஜி இஸ்லாமிய தமிழ் சங்கத்தின் (AMTC)நல்வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!!!!

-நிர்வாகம்

அரஃபா நோன்பு.....Le jeûne de la Journée de 'Arafat..........Fasting the Day of ‘Arafat

அரஃபா நோன்பு :-

அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்-முஸ்லிம்


குறிப்பு:- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது.அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.ஆதாரம் புகாரி முஸ்லிம்

------------------------------------------------------------------

La Journée de 'Arafah aura lieu demain, dimanche 7 Décembre, 2008, inshaa.-Allah!

Le jeûne de la Journée de 'Arafat

Il est préférable de jeûner le jour de la "Arafah pour tous les musulmans qui ne sont pas performants Hajj parce que le Prophète (sal-Allah» alayhe wa Sallam) n'a pas rapide sur la Journée de la "Arafah d'adieu au cours de la Mecque.

La préférence de jeûne, le Jour de la 'Arafah pour tous les musulmans qui ne sont pas performants Hajj a été mentionné dans un hadith dans lequel le Prophète (sal-Allah »alayhe wa Sallam) a été posé des questions sur le jeûne ce jour-là, et il a répondu:

((... Jeûne le jour de la "Arafah est une expiation pour (tous les péchés de l') l'année précédente, et une expiation pour (tous les péchés de l') année à venir)), Saheeh Muslim

Alors, mes bien-aimés frères et sœurs dans la prédication, si il est difficile pour vous de jeûner tous les neuf des dix premiers jours de l'accueil-Hijjah, puis au moins ne pas vous refuser la grande et généreuse récompense pour la Journée de jeûne de 'Arafah!

______________________________________________

The Day of ‘Arafah will be tomorrow, Sunday 7 December, 2008, inshaa.-Allaah!


Fasting the Day of ‘Arafat

It is preferable to fast the Day of 'Arafah for all those Muslims who are not performing Hajj because the Prophet (sal-Allaahu 'alayhe wa sallam) did not fast on the Day of 'Arafah during the Farewell Hajj.

The preferability of fasting on the Day of 'Arafah for all those Muslims who are not performing Hajj has been mentioned in a hadeeth in which the Prophet (sal-Allaahu 'alayhe wa sallam) was asked about fasting on that day, and he replied:

((…Fasting the Day of 'Arafah is an expiation for (all of the sins of the) previous year, and an expiation for (all of the sins of the) coming year)), Saheeh Muslim

So, my beloved brothers and sisters in Islaam, if it is difficult for you to fast all nine of the first ten days of Dhul-Hijjah, then at least do not deny yourself the great and generous reward for fasting the Day of 'Arafah!

#############################################

mardi, novembre 11, 2008

பைய்த்துல்மால் !!!!!!!!!!!!!!!!!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹிம்

பைய்த்துல்மாலின் செயல்பாடுகள் :-

ஜகாத்:

- ஜகாத் இறைவனால் மனிதனுக்கு விதிக்கப்பட்ட ஃபர்லான ஐந்து கடமைகளில் ஒன்று.
- ஜகாத்தைப் பெற தகுதியுடையோரை (தனி, தனி நபர்) கண்டறிந்து ஒரு இமாமின் வழிக்காட்டுதலின் பேரில் பைத்துல்மாலின் ஆலோசனைக் குழுவின்படி செலவு செய்ய வேண்டும்.
- பகிரங்கமாகவோ, ரகசியமாகவோ (Gift மாதிரி)


சதக்கா:

- ஒரு முஸ்லிமுக்கு சமுதாயத்தின் மீதுள்ள கடமை. இதர உதவிகளுக்கு (வட்டியில்லா கடன், பெண்ணின் திருமணச் செலவு, பள்ளி மாணவருக்கு உதவித்தொகை, மதரஸாக்கள், பள்ளிவாசல், மருத்துவச்செலவு, இன்னும் பற்பல). இது பைத்துமாலின் ஆலோசனைக் குழுவின்படி வழங்கப்படும்.

உதவிக் கோருவோரிடம்.......
(1) பள்ளிவாசல்,
(2)மதரஸா,
(3) தனிநபர் அவர்களிடமிருந்து தக்கச் சான்றிதழ் பெற வேண்டும்
(4) பிரான்ஸ் நாட்டில் மைய்யத்து அடக்கம் செய்வதற்கான செலவுகளுக்காக உதவி கோருபவர்களுக்கு கடன் உதவி செய்தல்


சதக்கத்துல் ஃபித்ரு:

- இது ஏழை எளியோருக்குப் பெருநாளை சந்தோஷமாக தன் சகோதர முஸ்லிமுடன் பகிர்ந்துக் கொள்ள வல்ல அல்லாஹ் நமக்கு அளித்த கடமை. இதை ரமலானின் முற்பகுதியில் (பிறை 25-க்குள்) வழங்கச் செய்து பிற்பகுதியில் பெருநாளைக்கு முன்பாக செலவு செய்தல். (உணவாகவோ, உடையாகவோ அல்லது பணமாகவோ)

இப்படிக்கு,
நிர்வாகம்.

மாதாந்திர பயான் - நவம்பர் (Novembre, 2008)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)......


பேரன்புடையீர்,

இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் 16.11.2008 அன்று பிற்பகல் சரியாக 14.30 மணி முதல் 17.00 மணி வரை நமது சங்க வளாகத்தில் பயானும், அதனைத் தொடர்ந்து மஃஹ்ரிப் தொழுகைக்கு பின்பு பைய்த்துல்மால் தொடக்க நிகழ்ச்சியும் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தாங்கள், தாங்களின் குடும்பத்துடன் கலந்துக்கொண்டு « பயனடையுமாறு » அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


ASSALAMOU ALAIKOUM

Chers frères, Chères Sœurs,

Votre Association AMTC, vous convie à une conférence Thématique qui aura lieu le Dimanche 16 novembre 2008, de 14 H 30 à 17 H 00 dans le LCR de la Chanterelle.
Nous vous attendons nombreux

இப்படிக்கு,
நிர்வாகம்.

mardi, septembre 30, 2008

நோன்புபெருநாள் நற்செய்தி........

இன்று (01.10.2008) நோன்புபெருநாள் கொண்டாடும் அனைத்துலக முஸ்லீம் சகோதர, சகோதரிகளுக்கு நமது செர்ஜி இஸ்லாமிய தமிழ் சங்கத்திற்கு (AMTC)காயல்பட்டினத்திலிருந்து வருகைதந்துள்ள இமாம் முஹம்மது சாலிஹ் அவர்களின் நோன்புபெருநாள் நற்செய்தி........


நோன்பு பெருநாள் அறிவிப்பு !! Fin Ramadan 2008 et date Aid El Fitr 2008

இன்ஷா அல்லாஹ்,


புதன்கிழமை 01.10.2008


அன்று நோன்பு பெருநாள் என்று பிரான்ஸில் உள்ள பெரிய பள்ளிவாசலால் அறிவிக்கப்பட்டுள்ளது.............

La Grande moquée de Paris

Ramadhan : Fête de l’Aïd-el-fitr


Ce lundi 29 septembre 2008 (correspondant au 29 Ramadhan 1429), après avoir appris et constaté que le croissant de la nouvelle lune n’a pas été visible le 29 Ramadhan 1429 de l’Hégire (correspondant au lundi 29 septembre 2008), déclare aux musulmans de France que la Fête de l’Aïd-el-fitr est fixée au :


Mercredi 1er Chawel 1429 de l’Hégire
Correspondant au :

Mercredi 1er octobre 2008





jeudi, juillet 24, 2008

2008 வருட , AMTC-யின் கோடைக்கால இன்பச்சுற்றுலா

இந்த வருட 2008, AMTC-யின் கோடைக்கால இன்பச்சுற்றுலா இனிதே ஜீலை மாதம் முதல் தொடங்கியது ......................................................

இந்த வருட சுற்றுலா விபரம் மற்றும்செல்லும் இடங்களுக்கு விருப்பப்பட்டவர்கள் நமதுச் சங்கத்துடன் தொடர்புக்கொண்டு முன் பதிவு செய்துக்கொள்ளுமாறுக் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

இப்படிக்கு,
நிர்வாகம்.

dimanche, mars 23, 2008

கொம்யூன் பஞ்சாயத்து தேர்தல்-2008





நடந்து முடிந்த (Mars 2008) நமது பிரான்ஸ் நாட்டின் கொம்யூன் பஞ்சாயத்து தேர்தலில் நமதூர் செர்ஜி கொம்யூன் பஞ்சாயத்திற்கு மீண்டும் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி கட்சியின் நகர தந்தை டோம்னிக் லேபேவ்ர் அணியில் இடம் பெற்ற நமது சகோதரரும், நமது சங்கத்தின் செயலாளருமான முஹம்மது காசீம் அவருகளும் நகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதனை மிகமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

vendredi, février 29, 2008

மீலாது நபி விழா அழைப்பிதல்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் !!!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.....)

நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஆகவே, இறை நம்பிக்கையாளர்களே !!நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள் !!! (அல் குர் ஆன் 33:56)
பேரன்புடையீர்,

இன்ஷா அல்லாஹ் நிகழும் ஹிஜ்ரி 1429 ஆம் ஆண்டு ரபியுல் அவ்வல் பிறை 14 சனிக்கிழமை 22.03.2008 அன்று பிற்பகல் சரியாக 15.00 மணிக்கு நமதுச்சங்க வளாகத்தில் மீலாது நபி விழா நடைப்பெற உள்ளது. அது சமயம் நமது குழந்தைகளின் குர்ஆன் கிஃராத்தும், மார்க்க அறிஞர்களின் சிறப்புச் சொற்பொழிவும் அதனைத் தொடர்ந்து நடைப்பெறவிருக்கும் விருந்து உபசரிப்பிலும் தாங்கள் அனைவர்களும் குடும்பத்தினர்களுடன் கலந்துக்கொண்டு இவ்விழாவை சிறப்பித்துத் தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அன்று காலை 10.00 மணிக்கு நமதுச்சங்க வளாகத்தில் மௌலூது ஓதப்படும், அதில் தாங்கள் அனைவர்களும் கலந்துக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு,
நிர்வாகிகள்.

vendredi, décembre 21, 2007

ஹஃஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள் !!!!

இன்று (19.12.2007) ஹஃஜ் பெருநாள் கொண்டாடும் அனைத்துலக முஸ்லீம் சகோதர, சகோதரிகளுக்கு நமது செர்ஜி இஸ்லாமிய தமிழ் சங்கத்தின் (AMTC)நல்வாழ்த்துக்கள்.

-நிர்வாகம்

samedi, octobre 13, 2007

நோன்புபெருநாள் நல்வாழ்த்துக்கள் !!!!!!!!!

இன்று (13.10.2007) நோன்புபெருநாள் கொண்டாடும் அனைத்துலக முஸ்லீம் சகோதர, சகோதரிகளுக்கு நமது செர்ஜி இஸ்லாமிய தமிழ் சங்கத்திற்கு (AMTC)அம்பகரத்தூரிலிருந்து வருகைதந்துள்ள இமாம் A.S அஷ்ரஃப் அலி ரஷாதி அவர்களின் நோன்புபெருநாள் நற்செய்தி........


dimanche, septembre 02, 2007

Coran Audio - திருகுர்ஆன் கிராஃஅத்

நமது இணையதளத்தில் புதியதாக திருகுர்ஆன் கிராஃஅத் கேட்கக்கூடிய வசதியை இணைத்துள்ளோம்........................ இன்ஷாஅல்லாஹ் இதன் முழு பணியும் விரைவில் நிறைவுப்பெறும்.

mercredi, août 29, 2007

கோடை கொண்டாட்டம்...........

இந்த வருடத்திற்க்கான கோடை விடுமுறை நிறைவுபெறுவதை நமது சங்கத்தின், சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்களுடன் மிகச் சிறப்பான முறையில் சிறிய சிற்றொன்றியுடன் மகிழ்ந்து கொண்டாடிணோம்...............................



mardi, août 28, 2007

2007-க்கான நமது சங்கத்தின் கடற்கரை சுற்றுப்பயணம்

நமது சங்கத்தின் மூலம் இந்த வருடம் 25-08-2007 கடற்கரைக்கு சென்றுவந்தோம்..........................


AMTC-யின் இந்த வருட பூங்கா சுற்றுப்பயணம்

AMTC-யின் இந்த வருட பூங்கா சுற்றுப்பயணம்


நமது சங்கத்தின் மூலம் இந்த வருடம் La Mer de Sable என்ற பூங்காவிற்கு 11-08-2007 சென்றுவந்தோம்..........................

samedi, juin 09, 2007

தமிழ் பாடசாலையின் ஆண்டு விழா !!!!!!

நமது சங்கத்தில் நடைப்பெற்றுவரும் தமிழ் பாடசாலையின் இந்த வருட ஆண்டு விழா வருகின்ற 09.06.2007 அன்று மாலை 16.30 முதல் 18.30 மணிவரை நமது சங்க வளாகத்தில் நடைப்பெறவுள்ளது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்கணம்,

நிர்வாகம்.


jeudi, janvier 25, 2007

"இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்"

அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும்,

நமது சங்கத்தின் மூத்த உறுப்பினர் அப்துல் மஜீது அவர்கள் 23.01.2007 (செவ்வாய்கிழமை) முஹர்ரம் பிறை 4-ல் தாருல்பனாவை விட்டு தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள்.

அவர்களின் நல்லடக்கம் வல்ல இறைவனின் உதவியால் 25.01.2007 அன்று அடக்கம் செய்யப்பட்டது.

அவர்களின் சுவன வாழ்விற்காக "துஆ" செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வஸ்ஸலாம்.

mercredi, novembre 22, 2006

AMTC TSUNAMI PROJECT

Ces 3 Maisons ont etaient rèalisées pour les victimes du TSUNAMI (en Inde) en partenariat avec la ville de Cergy, inaugurées le 05 Nov 2006, le restant du projet se realiserons du fur et à mesures que nous collecterons les dons. Les demandes sont importantes sur place, les victimes attendent beaucoup de nous tous.


Tous ensembles aidons les !!!! Rejoingnez nous !!!!!!!!


துனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவி செயவதற்கு நமது செர்ஜி மேரியின் மூலம் நமது நாகை மாவட்டத்தில் உள்ள பொய்கைநல்லூரில் மூன்று வீடு கட்டுமான பணி நிறைவடைந்து அதன் திறப்புவிழா கடந்த 05.11.2006 அன்று மிகச் சிறப்பாக நிறைவேறியதின் சில காட்சிகள் இங்கே.....






mardi, septembre 12, 2006

Conseils pour aller à La Mecque

Conseils pour aller à La Mecque - ஹஜ்ஜைப் பற்றிய முழு விபரங்களையும் ஃபிரஞ்ச் மொழியில் அறிந்துக் கொள்ள இதோ ஒரு புதிய இணையத்தளம்............

குறிப்பு: இந்த இணைப்பை எப்பொழுதும் சுலபமாக இணைத்திட நமது இணையத்தளத்தில் பக்கவாட்டிலுள்ள Links/Liens என்ற தலைப்பின் கீழ் அமைந்து இருக்கும்

SOS Pèlerin a publié une liste d’opérateurs de voyages à l’intention des pèlerins français se rendant à La Mecque.
La iste est disponible sur http://www.sospelerin.org/

Merci, 20Minutes, 12.09.2006

mercredi, septembre 06, 2006

திறப்பு விழாவை நோக்கி AMTC-யின் TSUNAMI PROJECT

திறப்பு விழாவை (புதுமனை புகு விழா) நோக்கி AMTC-யின் TSUNAMI PROJECT


AMTC-யின் சமூகச் சேவை பட்டியலில் தற்சமயம் கடல் கடந்து முத்திரைப்
பதிக்கும் பொற்க்காலம் மிக விரைவில் இருக்கின்றது.........

TSUNAMI-யால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நம்முடைய நகராட்சியாளர்கள்(Mari, Cergy) நமது தாய் நாட்டில்(India) பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்க்காக நமதுச் சங்கத்தின் உதவியை நாடினார்கள். பல சமூகச் சேவையில் பங்குக்கொள்ளும் நமதுச் சங்கம், இந்த மாபெரும் உதவியை செயல்படுத்துவதற்க்கு தலைவர் தாஜீதின் மற்றும் செயலாளர் முஹம்மது காசீம் ஆகியோர்களின் அயராத முயற்சியினால் தஞ்சையில் உள்ள லயன்ஸ் கிளப் (Lions Club, Thanjavur) உதவியை நாட, அவர்கள் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அருகில் உள்ள பொய்கைநல்லூர் என்ற கிராமத்தில் மூன்று வீடுகள் கட்டுவதற்க்கு தீர்மானித்தார்கள்.

இதன் ஆரம்பக்கால பணி முதல் இன்றைய பணிவரை உள்ள சிக படக்காட்சிகள் இங்கே......................................

இந்த புதிய வீட்டினைத் திறந்து வைப்பதற்க்கு நமது நகரத் தந்தை(Maire, Cergy) செல்ல இருக்கின்றார்கள்.




















jeudi, août 31, 2006

இந்த வருட இறுதிச் சுற்றுலா-26.08.2006

AMTC-யின் இந்த வருட(2006) இறுதிச் சுற்றுலா 26.08.2006 அன்று PARC D'HEROUVAL-லில் இனிதே BBQ PARTY-யுடன் நிறைவேறியது..........

இன்ஷாஅல்லாஹ் இனி அடுத்த வருடம் இது போல் மேலும் பல புதிய இடங்களுக்கு, புதிய நாடுகளுக்கு நாம் அனைவரும் ஒரு குடும்பமாக, நண்பர்களாக, சகோதர, சகோதரிகளாகச் சுற்றுலா செல்ல வல்ல இறைவனிடம் துஆ செய்வோமாக !!!!!

இந்த வருடச் சுற்றுலாவிற்க்கு கலந்துக் கொண்ட தாங்கள் அனைவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை என்றென்றும் கூறிக்கொள்ளும் .........


நிர்வாகம்.












mardi, août 29, 2006

ACTIF SPORTS CLUB

ACTIF SPORTS CLUB

புதியதாகத் தொடங்கப்பட்டுள்ள ACTIF என்ற அசோசியனில் ACTIF SPORTS CLUB என்ற பிரிவை ஏற்படுத்தி அதில் FOOT BALL, VOLLY BALL, BADMITTON, CIRCKET, CARRAM BOARD மற்றும் CHESS போன்ற விளையாட்டுக்களை நமது சகோதர்களுக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் விளையாடுவதற்க்கு ஊக்கவித்துள்ளோம்.......











jeudi, août 24, 2006

மீண்டும் இரண்டுச் சுற்றுலா !!!!!!!!!!

அடுத்தடுத்த நாளில் மீண்டும் இரண்டுச் சுற்றுலா !!!!!!!!!!


AMTC-யின் சார்பில் 19.08.2006 அன்று PARC SAINT PAUL-லுக்குச் சென்று வந்த சுற்றுலாவின் சில காட்சிகளும், மேலும் 20.08.2006 அன்று AMTC மற்றும் FMC சார்பில் QUEND PLAGE-க்கு சென்று வந்த சுற்றுலாவின் சில காட்சிகளும் இங்கே.....................

கடற்கரைச் சுற்றுலாவிற்கு எங்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களின் ஒருவரான அண்ணன் பஷீர் அவர்களும் கலந்துக் கொண்டார்கள்.


விரைவில் ACTIF SPORTS CLUB Photo's வெளியிடப்படும் !!!!!!!!!!!!!!!!!!!!!














mercredi, août 16, 2006

அழகிய குழந்தைகளின் பெயர்கள்...............

தாங்கள் குழந்தைகளுக்கு அழகிய பெயர்களை தேர்ந்தெடுக்க...................

குழந்தைகளின் பெயர்கள்

சமையல் குறித்த தமிழ் இணையத்தளம் !!!!!!!!!

முற்றிலும் சமையல் குறித்த தமிழ் இணையத்தளத்துடன் தாங்களை இணைத்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்..........

சமையல் குறிப்பு தமிழ் இணையத்தளம்

mardi, août 15, 2006

இந்திய சுதந்திரத் தினவிழா (59 ஆவது ஆண்டு)


இந்தியா இன்று தனது 59ஆவது சுதந்திரத்தினவிழாவைக் கொண்டாடியது

AMTC FRANCE