mardi, novembre 11, 2008

பைய்த்துல்மால் !!!!!!!!!!!!!!!!!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹிம்

பைய்த்துல்மாலின் செயல்பாடுகள் :-

ஜகாத்:

- ஜகாத் இறைவனால் மனிதனுக்கு விதிக்கப்பட்ட ஃபர்லான ஐந்து கடமைகளில் ஒன்று.
- ஜகாத்தைப் பெற தகுதியுடையோரை (தனி, தனி நபர்) கண்டறிந்து ஒரு இமாமின் வழிக்காட்டுதலின் பேரில் பைத்துல்மாலின் ஆலோசனைக் குழுவின்படி செலவு செய்ய வேண்டும்.
- பகிரங்கமாகவோ, ரகசியமாகவோ (Gift மாதிரி)


சதக்கா:

- ஒரு முஸ்லிமுக்கு சமுதாயத்தின் மீதுள்ள கடமை. இதர உதவிகளுக்கு (வட்டியில்லா கடன், பெண்ணின் திருமணச் செலவு, பள்ளி மாணவருக்கு உதவித்தொகை, மதரஸாக்கள், பள்ளிவாசல், மருத்துவச்செலவு, இன்னும் பற்பல). இது பைத்துமாலின் ஆலோசனைக் குழுவின்படி வழங்கப்படும்.

உதவிக் கோருவோரிடம்.......
(1) பள்ளிவாசல்,
(2)மதரஸா,
(3) தனிநபர் அவர்களிடமிருந்து தக்கச் சான்றிதழ் பெற வேண்டும்
(4) பிரான்ஸ் நாட்டில் மைய்யத்து அடக்கம் செய்வதற்கான செலவுகளுக்காக உதவி கோருபவர்களுக்கு கடன் உதவி செய்தல்


சதக்கத்துல் ஃபித்ரு:

- இது ஏழை எளியோருக்குப் பெருநாளை சந்தோஷமாக தன் சகோதர முஸ்லிமுடன் பகிர்ந்துக் கொள்ள வல்ல அல்லாஹ் நமக்கு அளித்த கடமை. இதை ரமலானின் முற்பகுதியில் (பிறை 25-க்குள்) வழங்கச் செய்து பிற்பகுதியில் பெருநாளைக்கு முன்பாக செலவு செய்தல். (உணவாகவோ, உடையாகவோ அல்லது பணமாகவோ)

இப்படிக்கு,
நிர்வாகம்.

AMTC FRANCE